Monday, August 2, 2010

என் நரகமும் நீயே






இதுவரை நினைத்திருந்தேன்,

நீ மட்டுமே......


என் சொர்க்கம் என்று..

இப்பொழுதுதான்
உணருகிறேன்

என் நரகமும் நீயே என்று.....

காதல்

நீந்த தெரியாமல்
கிணற்றை
ரசிப்பது தவறென்று
ஒவ்வொரு முறை கால் தவறி
உள்விழும் பொழுதும்
நினைத்துக் கொள்கிறேன்


திரும்ப தோன்றுகிறது

உன்னை இழந்துவிட்டிருக்கும்
இக்கணத்தில் .......
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் .......


சற்றே
அடைந்திருக்கலாமென !.


ச்சீய் ...

ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!


மெளனம்

மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்


ம‌ற‌க்கிறாய்

பேச ஆர‌ம்பிக்கும்போது
பேச‌ம‌றுக்கிறாய்!
பேசிப்ப‌ழ‌கிய‌ பிற‌கு
பேச்சை
நிறுத்த‌ ம‌ற‌க்கிறாய்!.........


அதனால்

பெண்ணே...
நான்
கோபத்தைக்கூட
அன்பாய்க் காட்ட
காரணம்...
நான்
முகம் பார்க்கும்
கண்ணாடி... நீ!

உன்னை உடைத்தால்
என்
முகம் அல்லவா
உடைந்து உடைந்து
தெரியும்



சந்தேகத்தோடு கேட்கிறாய்

அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்


அப்படிப் பார்க்காதே

உன்னைத்தவிர வேற
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!


உணர்ந்தேன் உன்னால்

காதலை பற்றி கல்லூரி காலங்களில் எழும் விவாதங்களில்,
முதலில் எதிர்ப்பு கிளம்புவது என்னிடமிருந்தே..

நானும் அனுபவித்தேன்,
பசியில்லா நாட்களையும்
உறக்கமில்லா இரவுகளையும் உன்னால்...
அது ஒரு இனிய அனுபவம்.

வலியும் வேதனையும் தனக்கு வந்தால் மட்டுமே உணரமுடியும்,
எவ்வளவு பெரிய உண்மை என்பதை
என்னுள் நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்.

நீதான் கேட்டாய்,
எதுவாக இருந்தாலும் சொல் வெளிப்படையாக என்று... மறந்து விட்டாயோ!

ஏன்,
உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என்றாய்?
காதல் உண்மை என்றால்...அது வாழ்வில் ஒரு முறைதான்.

நீ யாரை வேண்டுமோ .....

நான் நினைத்தது உன்னை மட்டுமே,
சொந்தமானால் உனக்கு மட்டுமே...

என்றேனும் என் நினைவு தோன்றினால்,
உன் விழியின் ஓரத்தில் வடியும்
ஒரு துளி கண்ணீர் சொல்லும்,
உன்னிடம் என் காதலின் ஆழத்தை...!!



இயன்றவரை முயன்றேன்

இயன்றவரை முயன்றேன்
உன் நினைவுகளை என்னுள்ளிருந்து எடுக்க..
என் சந்தோஷத்தில் தான்
உன் பெயரை உச்சரிக்கிறேன் என்றால்..
என் சோகத்திலும் உன் பெயரையே உச்சரிக்கின்றேன்..

நினைக்க வேண்டுமென நினைக்கும்போதைவிட,
மறக்க வேண்டுமென நினைக்கும் போதுதான் உணர்ந்தேன்,
உன் நினைவுகளையே சுவாசிக்கின்றேன் என்று..
என் உயிருடன் ஒன்றான
உன் நினைவுகளை எடுக்க இனியும் இயலாது...


என்னைப் பார்ப்பதாக இருந்தால்

நீ என்னைப்
பார்ப்பதாக இருந்தால்
நேராகப் பார்...
ஓரப் பார்வைகள்
வேண்டாம்.
என் இதயம்,
கொஞ்சம் பலவீனம்........


ஞாபகம் இருக்கிறதா ?

நானும் நீயும் ஒரே ரிங்டோன்
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய மொபைலிலோ அழைப்பு
வந்தபோது நான் இருவருமே அவரவர்
மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?



தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?

முதன் முதலில் நான்
உன்னை மொபைலில் அழைத்தபோது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?

அவசரத்தில் நீ மொபைலை வைத்து
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு
ஒரேயொருநாள் நான் உன்
மொபைலாக இருக்கிறேனே
என நான் கேட்டபோது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


கொஞ்சவித்தியாசம்

சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா?

உன்னை நினைக்கறது சந்தோஷம்..

உன்னையே நினைக்கறது துக்கம் :)


முதல் குழந்தை

எல்லா ஆண்களும்
'காதல்'ங்கிற பேர்ல
ரெண்டாவது தாயை தேடுவாங்க,
ஆனா
காதலிக்கிற எல்லா பெண்களுக்கும்
கிடைக்கறது 'காதலன்'ங்கிற பேர்ல முதல் குழந்தை :)



No comments:

Post a Comment