Monday, August 9, 2010

பணம் என்பது……!

 
வயிறு ஓலமிட
உணவு படைத்தல்
பணத்தால் அளவிடப்பட்ட போது,
பணம் உணவானது ….!
நோய் வாய்ப்பட்டபோது 
மருத்துவ வசதி 
பணத்தால் அளவிடப்பட்ட போது 
பணம் மருத்துவனானது…!

உறவுகள் இணைந்திருக்க
பணம் பிரதானமான போது
பணம் உறவுகளை இணைக்கும்
கயிறானது …!
ஆனால்,
மனித வாழ்க்கைக்கு 
என்றுமே 
பணம், பணமாக 
தேவைப்படவில்லை 
என்பது …..

மதிப்பிட முடிகின்ற 
காகிதங்களை மீறி 
மதிப்பிட முடியாத 
மனிதநேயத்தை உணர்ந்தபோது ….

பணம் வெறும்
பண்டமாற்று தான் …!



1 comment: