Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Saturday, August 14, 2010

சங்கர் பாலிடெக்னிக்

வாழ்க்கையில் சிலவற்றை மறுபடி அசைபோடுவது கொஞ்சம் ஜாலியான விஷயம்









- முதல் முறையாக சைக்கிளில் குரங்கு பிடல் போட்டு பின்னே யாரும்   
   பிடிக்காமல் சென்றது
- முதல் காதல்
- முதல் சம்பளம்

அதேபோல், நம் வாழ்நாளில் நாம் படித்த பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அதே பெஞ்சில் உட்கார்வது, அப்பொழுது நண்பர்களிடம் போட்ட சண்டைகள் என அந்தக்கால நினைவுகளை அசைபோடுவது ஒரு தனி சுகம்.

அப்படித்தான் இருந்தது நான் போன முறை இந்தியா சென்றபோது நான் படித்த (ப்ளீஸ் சிரிக்காதீங்க) பாலிடெக்னிக்-க்கு சென்ற அனுபவமும்.


சங்கர் பாலிடெக்னிக்

எங்கள் கல்லூரிக்கு நீண்ட....... வரலாறும், பெருமையும் உண்டு. ஆம் ஜூலை மாதம் 1958-ல் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது... என்றால் சும்மாவா... 


ஐ.பி.எல்-ல் தோனி தலைமையில் உள்ள "சென்னை சூப்பர் கிங்ஸ்"-ம் இந்தியா சிமென்ட்ஸ்-ன் ஒரு அங்கமே...

நான் "சங்கர் பாலிடெக்னிக்"-ல் 2000-ல் மெக்கானிக்கல் முடித்தேன். இறுதி ஆண்டில் நான் மிகவும் பிரபலம் ஆனேன். இப்படியும் ஒருவனால் பண்ண முடியுமா.. என்ற அளவுக்கு ஒரு சாதனை... இன்றளவும் யாரும் அதனை முறியடிக்கவில்லை என்று இந்த முறை கல்லூரி சென்ற போது கேட்டு தெரிந்து கொண்டேன்.
(அது என்னவென்று கேட்காதீங்க... ரகசியம்... பரம ரகசியம்.,)

நான் பாலிடெக்னிக்-கை 2000-ல் முடித்தாலும் அதன் தொடர்பு இன்றும் தொடர்கிறது. ஆம் ஆண்டுதோறும் 2, 3 முறை நான் தொழில் நிமிர்த்தமாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 2005-ல் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இந்தியா செல்லும் போதெல்லாம் கல்லூரி-க்கு செல்வேன். இப்போது செல்லும் போது எல்லாம் புதியதாக இருந்தது. புது கட்டிடங்கள், புது புது விரிவுரையாளர்கள் என எல்லாம் புதியதாக இருந்தது.. முன்பு இருந்தவர்கள் இப்போது வெகு சிலரே....

அவர்களுடன்....... நானும்.... என் கல்லூரியும்....


                             View Larger Map
















இன்றும் சங்கர் பாலிடெக்னிக் நண்பர்கள் சங்கத்தின் (SIP Friendsமூலம் ஆண்டுதோறும் கல்லூரியில்  1958-லிருந்து படித்தவர்கள், நண்பர்கள் இப்போது தங்கள் குடும்பங்களோடு ஒன்று சேர்ந்து விழாவாக கொண்டாடுகிறார்கள்.(ஆண்டுதோறும் ஒரு முறை திருநெல்வேலியிலும், மறு முறை சென்னையிலும் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது)