Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Friday, August 20, 2010

எது வெற்றி? எது தோல்வி?



எது வெற்றி? எது தோல்வி?

நினைத்ததை அடைந்தால் வெற்றி.... அடைய முடியாவிட்டால் தோல்வி.



முதலில் புரிந்துகொள்ள வேண்டியது “தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை” என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில் நான் தோற்கவில்லை. நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு.

எனவே, நம் வாழ்க்கை அகராதியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.

குழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது ‘நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்” என முடிவெடுத்திருக்கிறதா? ‘50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்’ என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக்கொள்கிறது.

தோல்விக்குக் காரணங்களை ஆய்க

ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தோல்வியடையும்போது விஞ்ஞானப் பூர்வமாகக் காரண காரியங்களை ஆராய வேண்டும். தோல்விக்குக் காரணம் என்ன? எதில் குறை? என்ன குறை? என்பதைத் தீர்க்கமாகப் பார்க்க வேண்டும்.

அதாவது குறை, தொழில் அறிவிலா? அணுகுமுறையிலா? திறமையிலா? அல்லது எனக்கு வியாபார – விற்பனை உத்திகள் சரியாகத் தெரியவில்லையா? போட்டியா உலக நிலவரம் தெரியவில்லையா? தரமா? விலையா? வாடிக்கையாளர் சேவை போதவில்லையா? தொடர்ச்சியான வளர்ச்சி இல்லையா? கணக்கு களில் சரியில்லையா? தொழில் ஈடுபாடு அல்லது அக்கறையில்லையா? நன்கு கவனிக்கவில்லையா?

இப்படிப் பல கோணங்களில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களிடமும் ஆலோசகர் களிடமும் ஆலோசனை பெற வேண்டும். குறை களைக் கண்டுபிடித்துச் சரி செய்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

தோல்விக்கு பின் வரும் வெற்றி தரும் நன்மைகள்

இந்த மனித வாழ்க்கைச் சரித்திரத்தில் வெற்றியால் பெற்ற அறிவைவிட, தோல்வியால் பெற்றஅறிவும், விழிப்புணர்வும் அதிகம். எப்படி ஒரு மருத்துவர் உடலில் உள்ள கட்டியை நீக்கி னால், நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதன் பலனாக நன்மை கிடைக்கிறது. அதேபோலக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி தோல்வியைக் கொடுத்தால் அதனாலும் ஒரு நம்மை கிடைக்கிறது. நாம் மனப்பக்குவம் பெறுகிறோம்.


வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்து – சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனி தான்.

ஆகவே, நண்பர்களே! தோல்விகளைக் கடந்து அந்தச் சாதனைச் சந்தோஷத்தை அடைவோம். அதுவே நமக்குப் பேரானந்தம்.

தோல்வியானால்… அதனால் என்ன?

எது நடந்தாலும் இன்று முதல் ஒரு கேள்வியைக் கேளுங்கள். அந்தக் கேள்வி அதனால் என்ன? (So What?)

அதாவது அந்தத் தோல்வியால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நினைத்து அதனால் என்ன? எதுவும் வரட்டும். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் நான் சந்திப்பேன்’ என்று உறுதியாக நில்லுங்கள். ‘அதைத் தாங்கிக்கொள்ள நான் தயார்’ என்றமன உறுதியுடன் இருப்பவர்களும் எந்தச் சங்கடங்களும், தோல்விகளும், பிரச்சனைகளும் எந்தத் தீங்கினையும் செய்ய முடியாது.

அதாவது, “மாற்ற முடிந்தவற்றை மாற்றுவோம். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வோம்”. “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே?” என்று எதையும் எதிர்கொள்வோர்க்கு இந்த உலகில் எதுவும் பிரச்சனை இல்லை.


மவுனம்



வெற்றிக்கு வித்திடும் மவுனம்! 

மவுனம்...

பல நேரங்களில் மவுனமாக இருப்பது கடினமே. மவுனத்தைக் கலைத்து உங்களை கோபமூட்டிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஒருசிலர் செயல்படுவார்கள்.

அதிலும், ஐ.டி. உலகில் அவரவர் திறமையைக் கொண்டு முன்னுக்கு வருவோம் என்று நினைப்பவர்களை விடவும், அரசியல் பண்ணி, மேலதிகாரிகளை போட்டுக் கொடுத்து, எப்படியாவது அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என செயல்படுபவர்களே அதிகம். அதில் சிலர் வெற்றி பெறுவதும் உண்டு. ஆனால் அந்த வெற்றி நிலையானதாக இருக்காது.

மவுனத்திற்கும், மனோதத்துவத்திற்கும் தொடர்புகள் அதிகம். பெரும்பாலான நேரத்திற்கு மவுனமாக இருந்தாலும் மனோவியாதி உள்ளவர்களாகக் கருதி மற்றவர்கள் ஒதுக்கி விட நேரிடும். 

ஆனால், மவுனத்தால் பல விஷயங்களைச் சாதித்தவர்களும் உண்டு. மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பது பழமொழி. அதுவே எதிர்ப்புக்கும் அடையாளமாகக் கொள்ளலாம். 

ஒருவர் கூறும் விஷயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றால், அதனை ஆமோதிக்காமல் மவுனமாகச் சென்று விடுவோரும் உண்டு. இதனால், அந்தக் கருத்துகளை சம்பந்தப்பட்டவர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமல்ல.

   

மவுனமும், ஆன்மீகமும் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. ஆன்மீகத்தின் ஒரு அடையாளமான தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துகிறோம்.

பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் அவ்வப்போது, ஒருநாள் மவுன விரதத்தை கடைபிடிப்போரையும் காண்கிறோம். இதனால், மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு மருத்துவ அடிப்படையிலும் உடல் உறுப்புகளும் புத்துணர்ச்சியைப் பெறுகின்றன.

என்றாலும், எல்லா நேரங்களிலும் மவுனத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில், தேவையானவற்றை தெளிவாகவும், உறுதியாகவும் பேசுவது அவசியமாகிறது.

அதிக ஒலியுடன், ஆவேசமாகப் பேசுவதால் உடலின் சக்தி வீணாவதுடன், அப்படி பேசுபவர்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் தவறானதாக நேரிடும். எனவே அளவுடன் - தேவையானவற்றைப் பேசி நல்ல மனோநிலையை அடைவோம். 

மவுனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

தன்னம்பிக்கை

  

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும். "வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதீர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள். அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே உங்களை வெற்றிபெறச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதீர்கள்.செயலோடும் தொடங்குங்கள்.

சிந்தனை செய்யுங்கள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கையுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும். வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள். உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள்.

இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன், என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.

நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை, செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். வெற்றியின் இரகசியம் "கடின உழைப்பு" என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.

சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்கள்.

நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.

மனம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளையும், பிறரது திறமைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்தனைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.

"வெற்றி பெறுவோம்" என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்துவிடாது செயலாற்றிக்கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயர வேண்டும் என்று உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங்கள். கட்டளையை முழு வேகத்துடனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலிலும் இறங்கிவிடுவீர்கள். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.

வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது". தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு". வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதீர்கள்.

பிரச்னைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள். தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.

எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.

முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும்.

வேதனையை மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும்  தாங்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த நிலையில் தான் நீங்கள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக்கும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு 'எப்படி முடிந்தால் சிறப்பாக இருக்கும்' என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழுதினால் நிகழ்காலத்தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த்தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ்வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே 'முடிவு இப்படி இருக்க வேண்டும்' என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிராமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டுவந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.

செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். காலத்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் 'வெற்றி வீரனே' என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள். நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான்.

ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற்றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக்கொண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் எனக்கு துணை கேட்க மாட்டேன். வெற்றியடைய சுயலாபத்தைக் கொடு. எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு.  -  தாகூர்

நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படுகின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நிமித்தம். முழுமை பெறுவதே அமைதி. 
 - தொல்காப்பியர்

எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்தை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு காரணங்களால் நமக்குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர் காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல்செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று "ஒரு சுயமதிப்பீடு" இல்லாத போது நம்முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என்னால் முடியும் என்கிற நம்பிக்கையினைப் பெறுகிறபோது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.

ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலும் அத்தனைத் துறைகளிலும் நம்முடைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசியம்.

முயற்சிகள் தொடரும்போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. முயற்சி விடாமுயற்சியாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகிறபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.

நான் விரும்பிய துறை கிடைக்கவில்லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணுவது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக்கொள்ளுகிறவன் என்றுதான் கருத வேண்டும்.

கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங்களுடைய முழுத்திறமையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங்கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணரலாம்.

தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற்பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத்திலேயே வெற்றியின் அறிகுறியை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவைபோன்ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. மனஉறுதியென்பது நமக்கு நாமே உண்மையோடும்,நம்பிக்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான்.

விழுவதில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில்தான், நமது வெற்றியின் ரகசியமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மூடிய கதவுகளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்திருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.

பார்க்கின்ற பொருட்களில் மகிழ்ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கின்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழைப்பு எனும் இரயில் வெற்றி அனும் இடத்தை அடைய வேண்டுமானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வேண்டும்.

தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் செயலில் துணிந்து இறங்கமாட்டார்கள்.

ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபிப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது. யாருடைய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத்துக்கு ஒப்பானவர்கள்.

முன்னேற்றப்பாதைக்கு, அகத்தூண்டுதல் ஒரு சதவிகிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .  -  எடிசன்

சுறுசுறுப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதியோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்றமடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.

எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.  -  ஆண்ட்ரு கார்னீகி

ஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவியை செய்து கொள்கிறோம்.

ஒரு இடத்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தான் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டும்.

'இன்று' என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது. அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். 'நாளை' என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.

தோல்வியை சந்திக்க நேரும் போது அதிருப்தி ஏற்படுவது இயற்கை தான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை "பிடிவாதமாக" மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேதனைகளை நினைத்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப் பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கியமாக 'சுய இரக்கம்' என்பது கூடாது.

உங்களை யாராவது விரும்பாவிட்டால் அது அவர்களுடைய பிரச்சனை. அது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை. மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போகும் நேரம் ரொம்பக் குறைவுதான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்.

விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியாதது இல்லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை மிகவும் முக்கியமானவராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச்சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.

ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கையே அவனை முழுவேகத்தில் செயல்படவைத்து தடைகளையும் தாண்டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைகளையும் மறக்கவும், கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கையுடன் சிந்தியுங்கள் வழிபிறக்கும்.

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழி

மனதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இலட்சியத்தை அடையும்வரை, நமது மனமும் செயலும் இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன்மூலம் புகழையும் பெறுகிறார்கள். மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம்சங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்து வைக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன.


Wednesday, August 11, 2010

கடைபிடி; முதல் படி!






நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள் வந்து நிற்பதுமா வாழ்க்கை?

படுத்த உடன் தூக்கம் வருவது வாழ்க்கை. பசித்து உணவு உட்கொள்வது வாழ்க்கை. சொந்தம் கூடி மகிழ்ந்ததில் மனது நிறைந்து சிரித்திருப்பது வாழ்க்கை. கண்மூடி அமர்கையில் உள்ளம் கோவிலாகி – உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்த பக்தியில் நம் நன்னடத்தை தெய்வமாகத் தெரிவது வாழ்க்கை. 

வாழ்வின் விசாலமான தெருக்களின் வெளிச்சத்தை இருட்டாக்கி விடுவதே நம் கோபமென்னும் ஒற்றைப் பல் அரக்கன் தான். நிறைய இடங்களில் நாம் தன்னை முன்னிலை படுத்த முனைவதே முந்தி வரும் கோபத்திற்கான காரணமெனக் கொள்வோம். 

தெளிவாக சிந்திப்பதிலும் உண்மையை விளங்கிக் கொள்வதிலும் கோபம் கடை தூரம் விலகிவிடுகிறது. உடன் பிறந்தால் தான் உறவு; பழக்கமுற்றால் தான் நட்பென்றில்லை, அசைவுறும் அத்தனை உயிர்களுமே யாரிடமோ அன்பு கொண்டவை தான். எதையோ நேசிக்கத் தெரிந்தவை தான். அன்பு வைப்பின் ஒரு மரம் கூட நமக்காக அசைவது புரியப் பட்டுவிடும் என்பதென் கூற்று. 

ஆக அன்பு கொள்ளுதலில்; விட்டுக் கொடுக்க மனம் விசாலப்பட்டுவிடுகிறது. விட்டுக் கொடுத்தலில் கோபம் அர்த்தமற்றுப் போகிறது. கோபமில்லாதிருத்தலில் நெருக்கமுன்டாகிறது. நெருக்கமான அன்பில்; வெளிச்சம் பளிச்சென பரவுவது கூடி வாழும் சிரிப்பு சப்தத்தில் கேட்கிறதென்பதால் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய முதல்படி “எங்கு கோபம் கொள்வதென தெளிவு கொள்வதே” யென்று உறுதிக் கொள்வோம். 

நான் தெருவாசலில் நின்றிருக்கிறேன். மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஒருவர் தெருவில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் வண்டியை விட்டுவிட சாக்கடை நீர் சொலீரென என் முகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. கோபத்தில் மிதிவண்டி ஓட்டியவனை அசிங்கமாக திட்டிவிட அவன் எங்கம்மாவை பத்தியாடா திட்டினன்னு இறங்கி வந்து மூக்கில் ரத்தம் வருவது போல ஒரு குத்து விடுகிறான். என் மகன் ஓடிவந்து எங்கப்பாவையாடா அடிச்சேன்னு அவன் கைய கால ஒடைக்க அவுங்க வீட்டு ஆளுங்க மொத்தமா ஒரு ஆட்டோவுல வந்து எங்களை பின்னி பெடலெடுக்க காவல் நிலையத்துக்கு புகார் போயி ரெண்டு குடும்பத்து ஆம்பளைங்களையும் ஒரு வாரம் காவல்ல வைக்க திரும்பி வரும் போது ஊரு கேவலமா பேசி சிரிக்க கோபத்தில் கொதித்தெழுந்த முகம் சாக்கடை நீரினை விட நாறாமலில்லை.


Sunday, August 8, 2010

உறக்கம்

http://iamchiq.fooyoh.com/iamchiq_beauty_health/files/attach/images/613/463/467/001/sleepmyths.jpg
எல்லோருக்கும் ஓய்வு தேவைப்படுகின்றது. அந்த ஓய்வை உறக்கத்தின் மூலம் தான் பெற முடியும் . உறக்கம் ஒரு சுகமே. இது ஒரு மருந்தும் கூட. பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள் ஒரு நல்ல உறக்கத்தில் மறைந்து விடுகின்றன.

சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய உடல் பாதிப்பு ஏற்படுகிறது. நெஞ்சுவலி, கால்மூட்டுவலி, மனச் சோர்வு, தினசரிக் கடமைகளைச் செய்ய இயலாமை போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.





உறங்குவதற்கு முன்பதாக கோப்பி, தேநீர் போன்ற விழிப்பை ஏற்படுத்தக் கூடிய பானங்களை அருந்தக் கூடாது. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு 8  மணி நேரம் உறக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானது .

http://www.psfk.com/wp-content/uploads/2009/02/sleep-reclaim-the-night-bbc.jpg
மனித வாழ்க்கையில் உறக்கத்திற்கு பெரியதோரு பங்கிருக்கிறது. அதுதான் பகல் முழுவதும் உடல் ரீதியாக, சிந்தனை ரீதியாக, உள ரீதியாக மனிதன் அடைகின்ற களைப்புகளை ஈடுசெய்கின்றது. உறக்கத்திற்கான நேரத்தை வரையறுத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண் டும். குறிப்பாக இரவிலே அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.  பகல் வேளை களில் ஏற்படும் சிறு தூக்கத்தை புறக்கணித்து விடக் கூடாது. .

நமது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த உறக்கம் உதவுகிறது என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தின் போதுதான் செல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதத்தை நமது உடல் தயார் செய்கிறது. உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு உறவாடும் நடவடிக்கைகளையும் மூளையில் கட்டுப் படுத்தும் பகுதிக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால் விழிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

http://www.thinkbaby.co.uk/news/images/a_to_z_of_sleep0.jpgஏமாற்றத்திற்கும், நம்பிக்கைக்கும் ஒரு பாலம் உண்டு என்றால் அது ஒரு முழுத் தூக்கமேயன்றி வேறில்லை. ஆனால், சிலருக்குப் படுத்தால் தூக்கம் வராது. எவ்வளவுதான் புரண்டுப் படுத்தாலும், சில மணி நேரங்கள் ஆனாலும் தூக்கம் வராது. எழுந்திருந்து குளியலறைக்குச் சென்று திரும்பினாலும் கூட தூக்கம் வராது. தூக்கம் வராத வேளையில் எரிச்சலும், களைப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.


ஆரோக்கியமான உறக்கத்தைப் பேணிக்கொள்வதற்கு உடல் ரீதியான ஓய்வு,  சிந்தனை ரீதியான ஓய்வு,  உள ரீதியான ஓய்வு என  மூன்று வகைகளில் உண்டு . இவற்றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டாலும் உறக்கமின்மைக்கு அதுவே காரணமாகிவிடும்.

http://factoidz.com/images/user/sleep.jpgசுவாசத்தில் ஏற்படுகின்ற சிரமம், ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி சிந்தித்தல், குடும்பப் பிரச்சினைகள் போன்றன உறக்கத்தை பாதிக்கக் கூடியனவாகும். 

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்லது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்ற நிலையை விட பெரிய பிரச்சனை வேறொன்றும்  இல்லை . 

நித்திரை குளுசை குடித்தால் தான்  தூக்கம் என்றநிலை சிலருக்கு இருக்கிறது .
ஆனால் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கண் மூடியதும் தூக்கம் வருகிறது. உடற்பயிற்சி என்பது ஒர் இயற்கை தூக்க மாத்திரை என்பதில் சந்தேகமில்லை.

சிலர் நித்திரை கொள்வார்கள் . வீட்டுக்கு யார் வந்து போனாலும் அவர்களுக்கு தெரியாது . அவர்களை கும்பகர்ணன் போல நித்திரை கொள்கிறாயே என வீட்டில் உள்ளோர் கூறுவார்கள் . இப்படியானவர்களும் உண்டு . 
http://www.topnews.in/health/files/sleep.jpgஇரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் தூக்கத்தின் அருமை நன்கு தெரியும். அதிகாலையில் தூக்கம் தானாக வரும். ஒரு சில நேரங்களில் எவ்வளவோ போராடியும் இறுதியில் முடியாமல தூங்கிவிடுவார்கள். விபத்து நேரிட்டு மரணமே ஏற்படும் என்று தெரிந்தும் தூங்கிவிடுவார்கள். 

நெஞ்செரிச்சல் அல்லது நெஞ்சுவலி, மூட்டு வலி,  புற்று நோய்,  டிமன்சியா என்ற மறதி நோய்,  மனநிலைப் பாதிப்பு என்று இருப்போர்களுக்கு தான் அதிகம் தூக்கம் வருவதில்லை. இவை தூக்கம் வராமல் இருப்பதற்க்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

தூக்கத்தைக் கெடுக்கும் சிகரெட், புகையிலை, மது போன்றபழக்கங்களைக் கைவிட்டு விட வேண்டும்.

http://www.topnews.in/health/files/Less-Sleep.jpg
தூக்கம் வராதபோது முகத்தில் உள்ள தசைகளைத் தளர்த்தும் பயிற்சி எடுங்கள். திடீரென்று உங்களது முகத்தில் உள்ள தசைகளின் இறுக்கத்தைச் சோதித்துப் பாருங்கள். கண்களைப் பாதி அடைத்து, சில நிமிடங்கள் வைத்துப்பாருங்கள் தூக்கம் தானாக வரும். கீழ் இமைகளின் அடிப் பகுதியை விரல்களால் தொட்டு மென்மை யாக மேல்நோக்கி உயர்த்தி ஒரு சில வினாடிகள் பிடித்தால் கூட தூக்கம் வந்துவிடும்.

ஓய்வு நமக்கு முக்கியம் தேவை . உடம்பில் உள்ள எல்லா நரம்புகளும் ஓய்வு எடுப்பதற்க்கு உறக்கம் இன்றியமையாதது . 




Tuesday, August 3, 2010

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?



உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே 

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.









கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.



  • நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
  • நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
  • நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
  • எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...

இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.

ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.


கோபத்தை குறைக்க சில வழிகள்:







கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.



செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.



கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும். 









நிச்சயம் சிரிச்சாக வேண்டும். . . . .









ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?

வீரன்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில

            சொல்லிட்டான்.

ராஜா: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!


வீரன்: அதைத்தான் சொல்லிட்டான்...!






Monday, August 2, 2010

மனம் விட்டுப் பேசுங்கள்



விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.
வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”
வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”
“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.